அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர்க்கு கொரோனா நோய் தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை அடுத்த அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுங செய்யப்பட்டது.

அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில் கொரானோ பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவரின் சகோதரர் ஒருவர் திருச்சிக்கு சென்று திரும்பியபோது அவர் மூலம் கொரோனா நோய்த் தொற்று பெண் டாக்டருக்கு பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments