Posts

Showing posts from May, 2020

மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொரோனா பாதித்தவர்களால் ராசிபுரத்தில் பரபரப்பு

Image
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த நான்கு பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த மசக்காளிபட்டி அத்தனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். தற்போது அந்த நான்கு நபர்களும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த 65 நபர்களையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு இறுதி சடங்கிற்காக வருகை புரிந்த இருவர் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இது இரண்டாம் முறையாக வெளிமாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்களில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்ற...

ஊரடங்கு பற்றி தற்போது தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு செய்தி

Image
5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்க அனுமதி தமிழக அரசு சென்னையில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை திறக்க அனுமதி டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்தவும் அனுமதி உணவங்களில் தனிமனித இடைவெளியோடு அமர்ந்து உணவு உண்ண அனுமதி சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏ.சி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய  அனுமதி திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ...

பள்ளிபாளையம் வார சந்தைக்கு தொடரும் தடை

Image
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் வாரசந்தை வாராவாரம் சனிக்கிழமை கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் சந்தை கூடுவது நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில் காய்கறி விற்பனையாளர்கள் சிலர் தங்களது வியாபாரத்தை சரக்கு ஆட்டோ மூலம் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர் இருப்பினும் காய்கறி வியாபாரிகள் சிலர் சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விற்பனை செய்து வரும் இடம் போதிய வசதி இல்லாததால் வியாபாரிகள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் காய் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் பல விவசாயிகள் விற்பனைக்கு வராமலேயே இருக்கின்றனர் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஜூன் 8ஆம் தேதி முதல் முழு அனுமதி

Image
நாடு முழுவதும் கொரான நோய் தொற்று பரவி வரும் தற்போதைய நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ள சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் உள்ள ஊரடங்கு பற்றி  மூன்று கட்டங்களாக முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது அதாவது முதற்கட்டமாக ஜூன் எட்டாம் தேதியில் இருந்து வணிக வளாகங்கள் உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைத் திருப்பது. இரண்டாம் கட்டமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும் என மத்திய அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது இந்நிலையில் இந்த அறிவிப்பில்ஆரஞ்சு பச்சை மற்றும் சிவப்பு போன்ற மண்டலங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கொரோனா பாதிப்பு அல்லாத பகுதிகளில் தளர்வு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலை சமாளிக்க நாமக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி கிராம சந்தையில் பெண் செய்த காரியம்

Image
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த இரண்டு நாட்கள் ஆனபிறகும் நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகம் இருப்பதால் மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் வழக்கம் வழக்கமாக நடைபெற்று வரும் சந்தையானது கொரோனோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வழக்கமாக நடைபெற்று வரும் இடத்தில் சந்தை தற்போது செயல்படுத்தப்படவில்லை. சமூக இடைவெளி மிகவும் முக்கியம் என்பதால் தற்போது காய் விற்பனையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரும்பாலும் வெட்டவெளியான இடத்தை தேர்வு செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இதனை நாமக்கல் மாவட்ட நிர்வாக சமூக இடைவெளி கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து இரண்டு நாட்கள் ஆனபிறகும் நாமக்கல் மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருவதால் விற்பனை செய்யும் வியாபாரிகளில் சிலர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த ச...

கொரோனா-வால் நாமக்கல்லில் தொழிற்சாலை மூடப்பட்டது

Image
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை இன்று மூடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வரலட்சுமி தொழிற்சாலையில் இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்நிறுவனம் இன்று மூடி தனிமைப் படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இயந்திரங்களைப் பழுது நீக்குவதற்காக வந்த நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களைத் தனிமைப்படுத்தி மேலும் தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் கொரோனா நோய் பாதித்த நான்கு நபர்கள் பணியாற்றிய பிரிவில் பணிபுரிந்த 28 நபர்களையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி வெற்றி விகாஸ் பள்ளியில் கண்காணித்து வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்புடன் தனது உறவை இன்று முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Image
உலக சுகாதார நிறுவனம் என்பது உலக நாடுகளுக்கு நோயினால் ஏற்படும் இடர்பாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் மற்றும் நோய் பரவ வண்ணம் கண்காணித்து வரும் ஒரு அமைப்பாகும். இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள்  அமெரிக்கா இன்று முதல் உலக சுகாதார அமைப்புடன் தனது உறவை முறித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் உலக சுகாதார அமைப்பு பொதுவாக செயல்படவில்லை என்றும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உலக சுகாதார அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தற்போது வரை நீதி சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 450 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி தொடர்ந்து இதுவரை உலக சுகாதார அமைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த செயல் தொடர்ந்தால் அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் நிதி எதிர்காலத்தில் நிறுத்தப்படலாம் என அறிவித்திருந்தார்.  மேலும் கொரோனா விஷயத்தில் சீனாவுடன் வெளிப்படைத் தன்மை யான பதில்களை அறிய அமெரிக்கா ஆவலாக உள்ளது எனவும் அதற்கு சுக...

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Image
29/05/2020 தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 618 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்வு இன்றைய உயிரிழப்பு - 9 தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 இன்று குணமடைந்தவர்கள் 765 தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,313

நாமக்கல் மாவட்டத்தில் மொபைல் போன்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விலை அதிகரிப்பு

Image
நாமக்கல் நகராட்சியில் உள்ள பல்வேறு மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடைகளில் விற்பனையாகும் மொபைல் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் மொபைல் உதிரி பாகங்கள் சரிவர கிடைக்காததால் தற்போது கையிருப்பில் உள்ள மொபைல் உதிரி பாகங்களை அதிக விலைக்கு விற்கும் நிலைக்கு கடை உரிமையாளர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். மொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் மாவட்டத்திற்கு இடையேயான போக்குவரத்து தடை போன்ற காரணத்தினால் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்களின் வரவு குறைவாக இருப்பதால் இந்த சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்களுக்கு அந்தந்த நிறுவனம் அளித்துவந்த கிரெடிட் சர்வீஸ் தற்போது சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததால் உரிமையாளர்கள் மொபைல் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வது  பணத்தை கொடுத்து தற்போது கொள்முதல் செய்து வருகின்றனர். வழக்கமாக நிறுவனத்திடமிருந்து கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  கிரெடிட் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மொபைல் மற்றும் உத...

கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆபத்தான இடத்தை நோக்கி பயணிக்கிறது

Image
கொரோனா வைரஸ் எனும் கொள்ளை நோய்யானது உலகம் முழுவதும் பரவி தற்போது தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.  இந்நிலையில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது இந்தியா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஆபத்தான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாகவே குறைந்தபட்சம் 5,000 நபர் என்ற எண்ணிக்கையில் தினசரி கொரனோ படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் நாளொன்றிற்கு 7000 மக்கள் என இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகளில் கொரானா வைரஸ் பாதித்தவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்தில் நீடித்து வருகிறது கடந்த இரு தினங்களில் மட்டும் 14 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரனோ வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதால் இந்தியா பதினொன்றாம் இடத்தில் இருந்து மிக விரைவாக ஒன்பதாம் இடத்திற்கு சென்றது. ...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Image
நாமக்கல் மாவட்டத்திற்கு டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக 19 நாட்களுக்கு முன்பு இருந்தது. இந்நிலையில் அந்த 77 நபர்களும் சேலம் மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து அனைவரும் வீடு திரும்பினர்.  இந்நிலையில் இந்த கடந்த 19 நாட்களாக நாமக்கல் மாவட்டம் சிவப்பு மட்டத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது ஆரஞ்சு மண்டலமாக மாற்றி சில நாட்களிலேயே இருவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அப்பா மற்றும் மகன் ஆகிய இருவரும் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதிக்கு வந்து வந்துள்ளனர்.இவர்களை பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து...

நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

Image
நமது மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய காரணத்தினால் சில வணிக நிறுவனங்களை எச்சரிக்கை செய்து, கடை விபரங்களை காவல்துறையினர் பெற்றுச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன!  எனவே இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, தயவுசெய்து கீழ்காணும் விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்! 2. முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. 3. கடை நுழைவாயிலில் அவசியம் கிருமி நாசினி, தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும். 4. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 5. கடைகளில் கூட்டம் சேர அனுமதிக்காதீர். கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில், கூட்டத்தினை பிரித்து ஒவ்வொரு குழுவாக உள்ளே அனுமதிக்க வேண்டும். 6. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை...

அனுமதி பெறாமல் 144 தடை உத்தரவை மீறி, நாமக்கல் நகரில் சாலையோரம் அரிசி வியாபாரம் செய்த வெளி மாவட்டத்ததை சேர்ந்தவருக்கு நாமக்கல் நகராட்சி அபராதம்

Image
நேற்று 26/05/2020 மாலை 5 மணியளவில் நாமக்கல், திருச்சி சாலையில், ஹோட்டல் ஶ்ரீ பவன் எதிரில், வெளி மாவட்டத்தை சேர்ந்த சிலர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிவந்து விற்பனை செய்கிறார்கள் என தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன், SK செந்தில்குமார் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்த்த போது சுமார் 50 பொதுமக்கள் கூட்டமாக சூழ்ந்திருக்க, மாஸ்க் கையுறை என எதுவேமே அணியாமல் சமூக இடைவெளியை துளியும் பின்பற்றாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முறையாக எந்த ஒரு ஆவணங்களும், அனுமதியும் பெறாமல் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்பதை துளியும் மதிக்காமல் கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தினால் உடனடியாக நகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனடியாக நகராட்சி ஆணையர் மற்றும் க...

நாமக்கல்லில் தான் பங்குபெற்ற கலை நிகழ்ச்சி அனுபவத்தை பற்றி கூறிய பிரபல தொகுப்பாளினி

Image
நாமக்கல் மாவட்டம் புழவர்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சித்ரா அவர்கள் தான் நாமக்கல் மக்களுடன் பங்கேற்ற அனுபவத்தை தற்போது கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் புழவர்பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சித்ரா மற்றும் மானாட மயிலாட நடன கலைஞர் திரு மாணாஸ் அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்து தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில் தான் பங்கு பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பற்றி கருத்து தெரிவித்து வரும் தொகுப்பாளினி சித்ரா அவர்கள் தான் நாமக்கல் மாவட்டத்தில் பங்கேற்ற கலை நிகழ்ச்சி பற்றி மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர் கூறியதாவது நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் பாசமும் பண்பும் மற்றும் உழைக்கும் குணம் உடையவர்கள் என்றும். இப்பகுதி மக்கள் கலைஞர்களை நல்ல நாகரிகத்துடன் வழி நடத்தியதாகவும் மீண்டும் சென்று ஒரு கலை...

கொல்லிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்

Image
கொரோனோ வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லிமலைக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் தற்போது திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் பல்வேறு பொழுதுபோக்கு பகுதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த கோடைகாலம் நல்ல சீசன் என்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருடாவருடம் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர். இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் சில தளர்வுகள் உடன் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வரத்து சற்று குறைவாகவே இருந்து வருகிறது. இருப்பினும் ஊரங்கில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த கோடை விடுமுறையை தங்களது குழந்தைகளுடன் நல்ல இடங்களில் செலவு செய்ய பலர் கொல்லிமலையை நோக்கி தற்போது படையெடுத்து வருகின்றனர். இதனால் கொரோனோ நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தற்போது கொல்லிமலைக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகிறது. மேலும் கொல்லிமலை நுழைவு பகுதியான இ...

நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி விலை உயர்வு

Image
நாமக்கல் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி விலை நேற்று முதலில் இருந்தே அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கோழி இறைச்சி பிராய்லர் கோழி கிலோ ரூ230 ரூபாய்க்கும் நாட்டுக்கோழி கிலோ 580 ரூபாய்க்கும் ஆட்டுக்கறி கிலோ 740 ரூபாய்க்கும் மாவட்டத்தில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலத்தில் விலையை கூட்டி விற்பனை செய்வதால் 50 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவசர கால நிலையிலும் இறைச்சி விலையை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் இறைச்சிக்கடைகள் மீது மக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்

Image
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் மின் பகிர்மான கழகத்திற்குகான அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் நாமக்கல் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மெகராஜ் மற்றும் ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் அவர்கள் மேற்பார்வை பொறியாளர் திருமதி இந்திராணி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பட்டிக்காட்டு பசுமை பட்டறைக்கு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி

Image
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை மற்றும் விலங்குகளின் மீது அதிக கவனம் செலுத்தி வரும் சமூக சேவை குழுவான பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் குழு இன்று ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த குழு இன்று ராசாம்பாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு மற்றவர்களின் உதவியை நாடி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இன்று வீட்டிற்கு நேரில் சென்று சமூக இடைவெளியுடன் வழங்கினார். இவ்வாறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு தேங்காய் சமையல் எண்ணெய் மற்றும் பல மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இப்பகுதியில் உள்ள 20 ஏழை எளிய குடும்பங்களுக்கு இக் குழு சார்பில் பட்டிக்காட்டு பசுமைக் குழு உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளினால் பல்வேறு இடங்களில் முடி திருத்தும் நிலையம் நேற்றிலிருந்து திறக்கப்பட்டன நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்பட்டன இந்த அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் அரசு ஏற்கனவே அறிவித்தபடி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இன்று திறக்கப்பட்டது. அதாவது முறையாக கிருமிநாசினி பயன்படுத்துவது முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக கடைபிடிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நாமக்கல் மாவட்ட சமூக இடைவெளி கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோணா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கோழிப்பண்ணையாளர்கள் ரூபாய் 560 கோடி நஷ்டம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் அதிக மக்களால் பார்க்கப்படும் மற்றும் முக்கிய தொழிலான கோழிப்பண்ணை கடந்த நான்கு மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது.  இந்நிலையில் இன்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடுகையில் கடந்த நான்கு மாதங்களாக நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் ஒட்டுமொத்தமாக 560 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர் என அவர் கூறினார். அதாவது இந்தியாவில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் மூலம் கொரோணா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தி ஆரம்பித்த நாளில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி மிகவும் மந்தமாக உள்ளது மேலும் உற்பத்தியான கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார். இதனால் தங்களுக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 560 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கோழி பணியாளர் சங்க தலைவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனார் மேலும் இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். இவற்றில் கோழிகளுக்கு உணவாக பயன்படும் சோயா புண்ணாக்கு போன்ற தீ...

இன்று ஓரே நாளில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...

Image
(21/05/2020)இன்று மட்டும் தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா வைரஸ்  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ்  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா  வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

மாதத்தவணை கட்டுவது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு ஆர்பிஐ கவர்னர் உத்தரவு

Image
மாதத்தவணை செலுத்துவதில் மக்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் விலக்கு அளித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று காலை சரியாக 10:30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த RBI தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் நாட்டில் நடைபெற்று வரும் நெருக்கடி நிலை காரணமாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க மாத தவணை செலுத்துவதில் மேலும் மூன்று மாதங்களுக்கு விளக்கு அளித்துள்ளார். இந்த விளக்கானது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள அனைத்திற்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார் அதாவது வீடு வாகனம் போன்ற கடன்களுக்கும் இஎம்ஐ செலுத்துவதில் விளக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அளிப்பதாக அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அரசு தற்போதுள்ள நிதிநிலையை சரிசெய்ய பல்வேறு சிக்கன செயல்களில் ஈடுபட்டு வருகிறது அதாவது மக்கள் அனைவரும் தங்களது பரிமாற்றத்தை பேங்க் மூலமாக செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இவ்வாறு செயல்படுத்தும் பொழுது இந்திய பொருளாதார நிலை சராசரியாக செயல்படும் என அவர் கூறினார்.

தற்போதுள்ள அவசர நிலையில் இந்த அறிவிப்பு தேவைதானா எடப்பாடியாரே

Image
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் போன்றவைகளின் வேண்டுகோளின்படி படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு கொரோனா வைரஸ் ஊறடங்கு காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களில் பணிபுரியும் பல்வேறு நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள குடும்பங்கள் வேலையின்றி வீட்டில் அமர்ந்திருப்பதால். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த இரண்டு சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழக அரசிடம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. அதாவது படப்பிடிப்பு நடத்தும் இடம் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளும் நடத்த வேண்டுமெனவும் படப்பிடிப்பில் பங்கேற்கும் கலைஞர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்...

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு

Image
இன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளின் உரிமையாளர்கள் கூட்டத்தில் அனைத்து கடைகளின் திறக்க மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் உத்தரவிட்டார் நாமக்கல் & இராசிபுரம் தாலுகா (கடைகள் திறக்க அனுமதிக்கப்படாத) நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி கடை உரிமையாளர்களின் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 20/05/2020 காலை 11 மணியளவில் நடைபெற்றது.  கூட்டத்தில், நாளை (21/05/2020) முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளையும், குளிசாதன வசதி செய்யாமல், 50% பணியாளர்களை கொண்டு, தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றை மட்டும் திறந்து, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி திறக்கப்படும் அனைத்து ஜவுளி கடைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுற...

அமெரிக்காவில் முழு ஊரடங்கை தளர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Image
ஊரடங்கு இன்று முதல் அமெரிக்காவில் படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா எனும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் இது அமெரிக்காவில் இதுவரை 15 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் ‌. இதில் இதுவரை 3 லட்சத்து 56 ஆயிரம் மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் இதுவரை இறந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அமெரிக்க நாடானது அண்டை நாடுகளுடன் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்ற பல்வேறு உதவிகளை நாடியது. அமெரிக்காவின் மருத்துவ உதவியை அறிந்த பல நாடுகள் தாமாகவே முன்வந்து ரபிட் கிட்  கிருமிநாசினி கையுறை முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பி வைத்தனர். அமெரிக்காவிற்கு இந்திய அரசு சார்பில் ஹைட்ராக்ஸிக்குலோராக்குயின் எனும் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.  இந்நிலையில் உதவிகளைப் பெற்ற அமெரிக்கா தற்போது கொரோணா வைரஸ் தொற்றில் இருந்து சற்று படிப்படியாக குறைந்து வருகிறது நிலையில் ...

மண்டல வாரியாக நேற்று 17.05.2020 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

Image
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த கோடை மழையின் அளவு விவரங்கள் நாமக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று கோடை மழையின் அளவு சற்று அதிகமாகவே பெய்துள்ளதால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்து தற்போது குளுமையான சூழ்நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மண்டலம் வாரியாக பெய்த மழையின் அளவை தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி நாமக்கல்லில் உள்ள ஒவ்வொரு மண்டலங்களிலும் எவ்வளவு மழை பெய்தது என்பதற்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக விபரம் எருமப்பட்டி 28mm குமராபாளையம் 17mm மங்களபுரம் 8 30mm மோகனூர் 29 எம்எம் நாமக்கல் 15mm பரமத்திவேலூர் 24mm புதுச்சத்திரம் 11mm ராசிபுரம் 4.20 mm சேர்ந்தமங்கலம் 49 mm திருச்செங்கோடு 34 mm கலெக்டரட் 8.50 mm கொல்லிமலை செம்மேடு 30 mm நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 49 mm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக நேற்று 258 mm மழை பெய்துள்ளது ...