நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

நமது மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய காரணத்தினால் சில வணிக நிறுவனங்களை எச்சரிக்கை செய்து, கடை விபரங்களை காவல்துறையினர் பெற்றுச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன! 




எனவே இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, தயவுசெய்து கீழ்காணும் விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

1. கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்!

2. முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

3. கடை நுழைவாயிலில் அவசியம் கிருமி நாசினி, தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

4. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

5. கடைகளில் கூட்டம் சேர அனுமதிக்காதீர். கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில், கூட்டத்தினை பிரித்து ஒவ்வொரு குழுவாக உள்ளே அனுமதிக்க வேண்டும்.

6. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை வெளியிட்டுள்ள ‘விழிப்புணர்வு வாசக அட்டை’யை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

7. எக்காரணத்தை கொண்டும் மாலை 7 மணிக்கு மேல் கடைகளில் வியாபாரத்தை தொடர கூடாது.

பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்ய, அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் கடைகளுக்கு வரலாம்.

அரசு அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் தங்களின் நிறுவன செயல்பாடுகளை கவனித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். விதிமீறல்கள் இருப்பின் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக வணிகம் தொடருங்கள்!

ஒரு சில வணிகர்கள் செய்யும் தவறு மற்றும் கவனக் குறைவால் அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்!

வணிகர் நலன் கருதி:
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்