நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு

இன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளின் உரிமையாளர்கள் கூட்டத்தில் அனைத்து கடைகளின் திறக்க மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் உத்தரவிட்டார்




நாமக்கல் & இராசிபுரம் தாலுகா (கடைகள் திறக்க அனுமதிக்கப்படாத) நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி கடை உரிமையாளர்களின் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 20/05/2020 காலை 11 மணியளவில் நடைபெற்றது. 




கூட்டத்தில், நாளை (21/05/2020) முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளையும், குளிசாதன வசதி செய்யாமல், 50% பணியாளர்களை கொண்டு, தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றை மட்டும் திறந்து, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.




இதன்படி திறக்கப்படும் அனைத்து ஜவுளி கடைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் விதிமீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேற்படி அறிவிப்பு திருச்செங்கோடு தாலூகாவில் செயல்படும் நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி கடைகளுக்கும் பொருந்தும் என திருச்செங்கோடு கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.




எனவே மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்றி, பாதுகாப்புடன் வணிகத்தை தொடர வேண்டும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்