அமெரிக்காவில் முழு ஊரடங்கை தளர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

ஊரடங்கு இன்று முதல் அமெரிக்காவில் படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

கொரோனா எனும் வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் இது அமெரிக்காவில் இதுவரை 15 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் ‌.

இதில் இதுவரை 3 லட்சத்து 56 ஆயிரம் மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் இதுவரை இறந்துள்ளனர்.




இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அமெரிக்க நாடானது அண்டை நாடுகளுடன் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்ற பல்வேறு உதவிகளை நாடியது. அமெரிக்காவின் மருத்துவ உதவியை அறிந்த பல நாடுகள் தாமாகவே முன்வந்து ரபிட் கிட்  கிருமிநாசினி கையுறை முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பி வைத்தனர். அமெரிக்காவிற்கு இந்திய அரசு சார்பில் ஹைட்ராக்ஸிக்குலோராக்குயின் எனும் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

 இந்நிலையில் உதவிகளைப் பெற்ற அமெரிக்கா தற்போது கொரோணா வைரஸ் தொற்றில் இருந்து சற்று படிப்படியாக குறைந்து வருகிறது நிலையில் இந்நாட்டில் கொரோணா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்துவது பற்றி நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அவர் அறிவித்தார் அதன்படி நேற்று இரவு அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாம் நாடு திரும்பவும் செயல்பட தயாராகி வருகிறது என்னும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார்.




சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்ட இந்த ட்வீட் அமெரிக்க மக்களில் பலர் அச்சமடைந்துள்ளனர் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த காலத்தில் ஊரங்கு  தளர்த்தினால் நோய்த்தொற்றின் வீரியம் அதிகரிக்கும் எனவும் எனவே இந்த ஊரடங்கு தளர்த்துவது பற்றி மறுபரிசீலனை செய்யும்படி மக்கள் பலரும் தங்களது கண்டனங்களை டுவிட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துமாறு மக்கள் கொரோனா நோய் தொற்றினை பொருட்படுத்தாமல் வீதியில் வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் நபர் கொரோணா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர் ஆனால் இந்த வாரம் முதல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 18 ஆயிரம் 17 ஆயிரம் என்ற எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது மற்றும் இறப்பு விகிதம் முன்பு இரண்டு நிமிடத்திற்கு ஒரு அமெரிக்கர் கொரோனா நோய் தொற்றினால் இறந்துவந்தனர் தற்பொழுது இறப்பு விகிதம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் நாட்டினை மீண்டும் வழக்கமாக செயல்பட வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் இந்தப்பதிவு பல மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சிலர் இந்த கொரோனா நோய் தொற்றில் பதித்து குணம் அடைந்தவர்கள் பலர் அச்சத்துடன் உள்ளனர்.

Comments