ஜூன் 8ஆம் தேதி முதல் முழு அனுமதி

நாடு முழுவதும் கொரான நோய் தொற்று பரவி வரும் தற்போதைய நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ள சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.


நாடு முழுவதும் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் உள்ள ஊரடங்கு பற்றி  மூன்று கட்டங்களாக முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது அதாவது முதற்கட்டமாக ஜூன் எட்டாம் தேதியில் இருந்து வணிக வளாகங்கள் உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைத் திருப்பது.

இரண்டாம் கட்டமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும் என மத்திய அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது இந்நிலையில் இந்த அறிவிப்பில்ஆரஞ்சு பச்சை மற்றும் சிவப்பு போன்ற மண்டலங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கொரோனா பாதிப்பு அல்லாத பகுதிகளில் தளர்வு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Comments