நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பாதித்த ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பாதித்த ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்





நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகரித்தது.

இந்நிலையில் ஏற்கனவே 50 நபர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.


மீதமுள்ள 26 நபர்களுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து இன்று அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இருப்பினும் மீதமுள்ள 25 கொரோனா நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்