ஊரடங்கு பற்றி தற்போது தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு செய்தி

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு




வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்க அனுமதி

தமிழக அரசு
சென்னையில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி

முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை திறக்க அனுமதி

டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்தவும் அனுமதி

உணவங்களில் தனிமனித இடைவெளியோடு அமர்ந்து உணவு உண்ண அனுமதி



சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏ.சி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி

ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய  அனுமதி

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள்

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை

ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது

கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது

50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்

ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்
பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி


தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:

1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.

2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.

6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

8 ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

Comments