ஊரடங்கு தளர்வில் வணிகர்களுக்கு மேலும் ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

ஊரடங்கு தளர்வில் மேலும் ஒரு சலுகை




ஊரக பகுதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட குளிர்சாதன வசதி செய்யப்படாத சிறிய துணிக்கடைகள், நாளை (14/05/2020) முதல் மாவட்டம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் செயல்படலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதன்படி 5 ஊழியர்களுக்கு மிகாமல், குளிர்சாதன வசதி செய்யாமல், அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வணிகம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதில் விதிமீறல்கள் இருப்பின், மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

எனவே வணிகர்கள் அரசு வழங்கியுள்ள இந்த சலுகையை நல்ல முறையில் பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்து வணிகம் தொடர வேண்டுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments