கொரோணா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கோழிப்பண்ணையாளர்கள் ரூபாய் 560 கோடி நஷ்டம்
நாமக்கல் மாவட்டத்தில் அதிக மக்களால் பார்க்கப்படும் மற்றும் முக்கிய தொழிலான கோழிப்பண்ணை கடந்த நான்கு மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடுகையில் கடந்த நான்கு மாதங்களாக நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் ஒட்டுமொத்தமாக 560 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர் என அவர் கூறினார்.
அதாவது இந்தியாவில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் மூலம் கொரோணா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தி ஆரம்பித்த நாளில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி மிகவும் மந்தமாக உள்ளது மேலும் உற்பத்தியான கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார்.
இதனால் தங்களுக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 560 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கோழி பணியாளர் சங்க தலைவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனார் மேலும் இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இவற்றில் கோழிகளுக்கு உணவாக பயன்படும் சோயா புண்ணாக்கு போன்ற தீவனங்களை 5 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைத்து தருமாறும் ஏற்கனவே கட்டிய ஜிஎஸ்டி தொகையினை திரும்ப அளிக்குமாறும் மற்றும் தற்போது செலுத்திவரும் மின்சார கட்டணத்தை சற்று சலுகை அளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் தற்போது தங்களது சொந்த ஊருக்கு திரும்பியதால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களை கோழிப் பண்ணைகளில் வேலை செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சரக்கு ரயில் மூலம் கோழி தீவனங்கள் எடுத்து வருவதில் தாமதம் ஏற்படுவதால் தீவனங்கள் உடனடியாக கெட்டுப் போவதால் இதனால் சரக்கு ரயில்களில் கோழித் தீவனங்களை ஏற்றிவரும் ரயில்களுக்கு தங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments
Post a Comment