நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லாத கொல்லிமலை
கொரோனா தொற்று இல்லாத கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இதுவரை கொரோனா தொற்று இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அப்பகுதியில் பணிபுரிந்து வரும் காவலர்களை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று விவகாரத்தில் கொல்லிமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றனர் எனவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்போது அவர்கள் மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கொல்லிமலை பகுதி மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தினசரி வந்து பொருட்களை வாங்குவதை தவிர்த்து ஒரு வாரத்திற்குத் தேவையான முழுமையான பொருட்கள் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்கின்றனர் மேலும் வெளியில் வரும்போது முகக் கவசம் மற்றும் பொருட்களை வாங்கி வீடு திரும்பிய பிறகு கைகளைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடக்க நடவடிக்கைகளில் மிகவும் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
மேலும் கொல்லிமலையில் மேல் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது கொல்லிமலையில் மேல் ஏறுவதற்கு பிரதான சாலையான சேர்ந்தமங்கலம் சாலை மற்றும் ராசிபுரம் வழியே செல்லும் கொல்லிமலை சாலை இரண்டும் தற்காலிகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது இவ்வாறு மலைமேல் உள்ள மக்கள் கீழே செல்லவும் கீழே உள்ள மக்கள் மேலே மலைக்குச் செல்லவோ தற்காலிக தடை விதிப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து இருப்பில் வைத்திருக்க கொல்லிமலையில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான வாகனங்களை அமைத்து அவற்றை சரியான முறையில் மக்களுக்கு தற்போது விநியோகித்து வருகின்றனர்.
இவ்வாறு மக்களுக்கு வினியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சமூக இடைவெளி கொண்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது வழக்கமாக இந்த கோடைகாலத்தில் கொல்லிமலைப் பகுதியில் அதிக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவது குறிப்பிடத் தக்கவை இருப்பினும் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்பகுதியில் வெறிச்சோடி நிலை காணப்படுகிறது.
இந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக மலைமேல் விற்பனைக்கு தயாராகி உள்ள பழா பழங்கள் அனைத்தும் தற்போது விற்கப்படாமல் கிடப்பில் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பிறகு தங்களது பழாபல விற்பனையை தொடங்க இருப்பதாக கொல்லிமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment