பொது ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் பொது ஊரடங்கு வருகிற மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நான்காம் கட்ட ஊரடங்கின் போது சில வரைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது அதாவது சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 50 சதவீத வேலையாட்களுடன் ஆலைகளை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மக்கள் அனைவரும் தங்கள் சுய கட்டுப்பாடுடன் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது மக்கள் வெளியில் செல்லும்பொழுது முன்னெச்சரிக்கையாக கட்டாயமாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று தற்போது அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் பிற மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதனை சரியாக கடைபிடிக்கும் படி அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Post a Comment