நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில். இதில் 55 பேர் நேற்று வரை குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் சனிக்கிழமை சென்னையிலிருந்து பள்ளிபாளையம் வந்த பெண் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதாக சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் வசித்த பகுதியை சுகாதாரத்துறையினர் தீவீர கண்காணிப்பில் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் சேர்த்து நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்ததுள்ளது. தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Post a Comment