மாதத்தவணை கட்டுவது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு ஆர்பிஐ கவர்னர் உத்தரவு

மாதத்தவணை செலுத்துவதில் மக்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் விலக்கு அளித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்




இன்று காலை சரியாக 10:30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த RBI தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் நாட்டில் நடைபெற்று வரும் நெருக்கடி நிலை காரணமாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க மாத தவணை செலுத்துவதில் மேலும் மூன்று மாதங்களுக்கு விளக்கு அளித்துள்ளார்.

இந்த விளக்கானது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள அனைத்திற்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார் அதாவது வீடு வாகனம் போன்ற கடன்களுக்கும் இஎம்ஐ செலுத்துவதில் விளக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அளிப்பதாக அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு தற்போதுள்ள நிதிநிலையை சரிசெய்ய பல்வேறு சிக்கன செயல்களில் ஈடுபட்டு வருகிறது அதாவது மக்கள் அனைவரும் தங்களது பரிமாற்றத்தை பேங்க் மூலமாக செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இவ்வாறு செயல்படுத்தும் பொழுது இந்திய பொருளாதார நிலை சராசரியாக செயல்படும் என அவர் கூறினார்.

Comments