பள்ளிபாளையம் வார சந்தைக்கு தொடரும் தடை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் வாரசந்தை வாராவாரம் சனிக்கிழமை கூடுவது வழக்கம்.





இந்நிலையில் கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் சந்தை கூடுவது நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காய்கறி விற்பனையாளர்கள் சிலர் தங்களது வியாபாரத்தை சரக்கு ஆட்டோ மூலம் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர் இருப்பினும் காய்கறி வியாபாரிகள் சிலர் சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது விற்பனை செய்து வரும் இடம் போதிய வசதி இல்லாததால் வியாபாரிகள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காய் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் பல விவசாயிகள் விற்பனைக்கு வராமலேயே இருக்கின்றனர் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Comments