நாளை (04.05.2020):அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி உண்டா?

இதற்கான பதிலை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு




நாமக்கல் மாவட்ட வணிகர்கள் கவனத்திற்கு!

நமது நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அடுத்த உத்தரவு வரும்வரை, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உத்தரவு தொடரும்!





இதனை மீறி நாளை கடைகள் திறக்கப்பட்டால், அது உத்தரவை மீறும் செயலாக கருதப்படும். அவ்வாறு உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வணிக நண்பர்கள் மிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





நாளை அல்லது நாளைய மறுநாள் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யும்படி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.





வணிகர்களின் வாழ்வாதாரம் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பரவுதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம் என்பதை கருத்தில் கொள்வோம்.





நமது வணிகத்தை தொடர, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிடும்வரை பொறுமை காப்போம்!



இப்படிக்கு,
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக,
ஜெயகுமார் வெள்ளையன்
மாவட்ட செயலாளர்
98437 98438

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்