கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு
தன்னுடைய தீவிர ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு
கடலூர் சிம்பு ரசிகர் மன்ற தலைவர் திரு சிம்பு ஆனந்த் அவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையை சிதம்பரம் மருத்துவமனையில் பெற்று வருகிறார்.
இந்த செய்தியை அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக தொலைபேசி வாயிலாக கொரோனா வைரஸ் பாதித்த ரசிகரை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
மற்றும் தமது ரசிகர்களின் தற்போதைய நிலை எவ்வாறு என கேட்டறிந்தார் மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் இந்த கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து மாநில அரசு தெரிவித்து வரும் அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கவும் என்றும் விரைவில் நீங்கள் இந்த கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவீர் அப்பொழுது நாம் இருவரும் சந்திப்போம் என தனது ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் சிம்பு
இந்த செய்தியை அறிந்த நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள் சிம்புவை பாராட்டும் விதமாக சிம்புவின் இந்த செயல் அவர் ரசிகர்களுக்கு மேலும் ஒரு புத்துணர்வு மற்றும் மன உறுதியை அளிக்கும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் சிம்பு அண்ணா என டுவிட் செய்த ஹரிஷ் கல்யாண் நடிகர் சிம்புவின் இந்த செயலை வரவேற்றுள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள்.
Comments
Post a Comment