கடைகளை திறக்க முழு அனுமதியளித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளை முறையாக பின்பற்றி கீழ்காணும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என இன்று 12/05/2020 மதியம் 12 மணியளவில் நடைபெற்ற அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்தார்!
டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
உணவகங்கள் (பார்சல் மட்டும்)
பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – *ஊரக பகுதிகளில் மட்டும்*
மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
பெட்டி கடைகள்
பர்னிச்சர் கடைகள்
சாலையோர தள்ளுவண்டி கடைகள்
உலர் சலவையகங்கள்
கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
லாரி புக்கிங் சர்வீஸ்
ஜெராக்ஸ் கடைகள்
இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
நாட்டு மருந்து விற்பனை கடைகள்
விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
டைல்ஸ் கடைகள்
பெயிண்ட் கடைகள்
எலக்ட்ரிகல் கடைகள்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
நர்சரி கார்டன்கள்
மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
மர அறுவை ஆலைகள் (Saw Mills)
மேற்கண்ட நிறுவனங்களில் குளிர்சாதன வசதி இருந்தால், அதை இயக்காமல் வணிகம் செய்ய வேண்டும்!
முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது!
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பை வணிக நிறுவனங்கள் முன்பு காட்சிப்படுத்தி வைக்க வேண்டும்!
வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நேரம்:
உணவகங்கள் - காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
காய்கறி மற்றும் மளிகை கடைகள் - காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை
இதர வணிக நிறுவனங்கள் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
விதிமீறல்கள் இருந்தால் அந்த நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்!
Comments
Post a Comment