நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பதினைந்து நபர் இன்று (13.05.2020) குணமடைந்து வீடு திரும்பினார்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 15 நபர்கள் குணம்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரித்தது.
இந்நிலையில் ஏற்கனவே 61 நபர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
மீதமுள்ள 15 நபர்களுக்கு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பதினைந்து நபர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து இன்று அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் தற்போது நாமக்கல் மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது மேலும் இதுநாள் வரை சிவப்பு மண்டலத்தில் நீடித்து வந்த நாமக்கல் மாவட்டம் தற்போது நேரடியாக பச்சை மண்டலத்தை அடைந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாவட்ட நிர்வாகிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பச்சை மண்டல பட்டியலில் நாமக்கல் மாவட்டம் சேர்க்கப்பட்டது.
Comments
Post a Comment