கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆபத்தான இடத்தை நோக்கி பயணிக்கிறது
கொரோனா வைரஸ் எனும் கொள்ளை நோய்யானது உலகம் முழுவதும் பரவி தற்போது தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது இந்தியா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஆபத்தான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாகவே குறைந்தபட்சம் 5,000 நபர் என்ற எண்ணிக்கையில் தினசரி கொரனோ படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் நாளொன்றிற்கு 7000 மக்கள் என இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக நாடுகளில் கொரானா வைரஸ் பாதித்தவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது ஒன்பதாவது இடத்தில் நீடித்து வருகிறது கடந்த இரு தினங்களில் மட்டும் 14 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரனோ வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதால் இந்தியா பதினொன்றாம் இடத்தில் இருந்து மிக விரைவாக ஒன்பதாம் இடத்திற்கு சென்றது.
இதே நிலை தொடர்ந்தால் இந்தியா முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் எளிதாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
குரோனோ வைரஸ் பாதித்த முதல் பத்து நாடுகளின் பட்டியல்
1.அமெரிக்கா
2.பிரேசில்
3.ரஷ்யா
4.ஸ்பெயின்
5. யுனைடட் கிங்டம்
6.இத்தாலி
7.பிரான்ஸ்
8.ஜெர்மனி
9.இந்தியா
10.துருக்கி
தற்போது இந்தியா முழுவதும் மொத்தம் 165829 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 71106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ள நிலவரப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனோ வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் இந்தியாவானது கொரோனவைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் சேர வாய்ப்பு உள்ளதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்
Comments
Post a Comment