மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொரோனா பாதித்தவர்களால் ராசிபுரத்தில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த நான்கு பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த மசக்காளிபட்டி அத்தனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.
தற்போது அந்த நான்கு நபர்களும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த 65 நபர்களையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு இறுதி சடங்கிற்காக வருகை புரிந்த இருவர் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இது இரண்டாம் முறையாக வெளிமாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்களில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து கொரோனா அறிகுறி வெளி மாநில மக்களின் மூலம் கண்டறிய படுவதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment