கொல்லிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்

கொரோனோ வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லிமலைக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் தற்போது திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.




நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் பல்வேறு பொழுதுபோக்கு பகுதிகள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த கோடைகாலம் நல்ல சீசன் என்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருடாவருடம் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் சில தளர்வுகள் உடன் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வரத்து சற்று குறைவாகவே இருந்து வருகிறது.

இருப்பினும் ஊரங்கில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த கோடை விடுமுறையை தங்களது குழந்தைகளுடன் நல்ல இடங்களில் செலவு செய்ய பலர் கொல்லிமலையை நோக்கி தற்போது படையெடுத்து வருகின்றனர்.

இதனால் கொரோனோ நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தற்போது கொல்லிமலைக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகிறது.

மேலும் கொல்லிமலை நுழைவு பகுதியான இரண்டு பகுதிகளிலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கொல்லி மலைக்கு மேலே செல்பவர் மற்றும் கீழே வருபவர்களை தீவிர கண்காணிப்பை பிறகு மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த மாதத்தில் தனியார் செய்தித்தாள் ஒன்று அறிவிப்பின்படி கொல்லிமலையில் ஒரு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து எந்தத் தொற்றும் ஏற்பட வில்லை என்ற பெருமை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டது.

அதைத் தற்காத்துக் கொள்ளும் வகையிலும் கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தேவைப்படும்போது மட்டும் வெளியே வந்து வாங்குகின்றனர் அவ்வாறு வாங்கும் பொழுது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த கோடை சீசனை திட்டமிட்டு விளைவிக்கப்பட்ட பலாப்பழங்கள் தற்போது சந்தைப்படுத்துவதில் கொல்லிமலை விவசாயிகள் போராடுவதால் பலாப்பழங்கள் வீணாகும் நிலையை தற்போது கொல்லிமலை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்