நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி விலை நேற்று முதலில் இருந்தே அதிகரிக்க தொடங்கி உள்ளது.


இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கோழி இறைச்சி பிராய்லர் கோழி கிலோ ரூ230 ரூபாய்க்கும் நாட்டுக்கோழி கிலோ 580 ரூபாய்க்கும் ஆட்டுக்கறி கிலோ 740 ரூபாய்க்கும் மாவட்டத்தில் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் பண்டிகை காலத்தில் விலையை கூட்டி விற்பனை செய்வதால் 50 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவசர கால நிலையிலும் இறைச்சி விலையை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் இறைச்சிக்கடைகள் மீது மக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்