தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலை சமாளிக்க நாமக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி கிராம சந்தையில் பெண் செய்த காரியம்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த இரண்டு நாட்கள் ஆனபிறகும் நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகம் இருப்பதால் மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் வழக்கம் வழக்கமாக நடைபெற்று வரும் சந்தையானது கொரோனோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வழக்கமாக நடைபெற்று வரும் இடத்தில் சந்தை தற்போது செயல்படுத்தப்படவில்லை.
சமூக இடைவெளி மிகவும் முக்கியம் என்பதால் தற்போது காய் விற்பனையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரும்பாலும் வெட்டவெளியான இடத்தை தேர்வு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இதனை நாமக்கல் மாவட்ட நிர்வாக சமூக இடைவெளி கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து இரண்டு நாட்கள் ஆனபிறகும் நாமக்கல் மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருவதால் விற்பனை செய்யும் வியாபாரிகளில் சிலர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அந்த சந்தையில் காய்கறி விற்பனை செய்த பெண் வியாபாரி ஒருவர் வெயிலை சமாளிக்க முடியாமல் தான் விற்பனை செய்த கீரைகளில் சிலவற்றை தன் தலையில் போட்டு வெயிலில் ஹெல்மெட் போன்று அதனைப் பயன்படுத்தினார் இதனை கண்ட மக்கள் சிலர் நகைப்புடன் அவ்விடத்தைக் கடந்து சென்றனர்.
Comments
Post a Comment