நாளை மது வாங்குவதற்கு முதலில் இதைப் படியுங்கள் மாவட்ட ஆட்சியரின் விதிமுறைகள்

தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை திரக்கும் படி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.





இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் 40 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மது பிரியர்கள் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடை திறக்கப்பட்டதால் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது அக்கூட்டத்தில் சமூக இடைவெளி என்பதை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் மக்களின் கூட்டம் அலை மோதியது.






எனவே இன்று முதல் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் மது பிரியர்களுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு வரிசைகள் அம்மாநில அரசுகளால் வசதி செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் நாளை மது கடைகள் திறக்க இருப்பதால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளனர்.






இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மது பிரியர்களுக்கு மது வாங்குவதற்கு பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளார்.





நாமக்கல் மாவட்ட மது பிரியர்களுகாண விதிமுறை

அதாவது நமக்கு மாவட்டத்தில் மது வாங்க விரும்புவோர் முன்னதாக முகக் கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் மற்றும் மதுப் பிரியர்கள் மது வாங்க வரும் பொழுது சரியானபடி சமூக இடைவெளி விட்டு மது வாங்கி செல்ல வேண்டும் மேலும் கும்பலாக ஐந்து நபருக்கு மேலாகவோ 144 தடை உத்தரவை மீறக் கூடாது தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை சிவப்பு பச்சை போன்ற அனுமதிச் சீட்டினை கட்டாயம் கொண்டு வர வேண்டும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.




மேலும் தமிழக அரசு சார்பிலும் மதுக்கடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதாவது வயது வாரியாக மது விற்பனை நேரத்தை கடைப்பிடிக்கும்படி மது கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு குறைந்தது இரண்டு காவலர்கள் போட்டு சமூக இடைவெளியை கண்காணிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்

நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிப்பு