பட்டிக்காட்டு பசுமை பட்டறைக்கு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை மற்றும் விலங்குகளின் மீது அதிக கவனம் செலுத்தி வரும் சமூக சேவை குழுவான பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் குழு இன்று ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த குழு இன்று ராசாம்பாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு மற்றவர்களின் உதவியை நாடி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இன்று வீட்டிற்கு நேரில் சென்று சமூக இடைவெளியுடன் வழங்கினார்.
இவ்வாறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு தேங்காய் சமையல் எண்ணெய் மற்றும் பல மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இப்பகுதியில் உள்ள 20 ஏழை எளிய குடும்பங்களுக்கு இக் குழு சார்பில் பட்டிக்காட்டு பசுமைக் குழு உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment