யார் யாருக்கெல்லாம் இந்த சந்தேகம் உள்ளது
நாமக்கல் திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி போன்ற மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகக்குறைந்தது இது தானாக பூஜ்யமாக குறைந்ததா இல்லை பூஜ்ஜியமாக்கப்பட்டதா?
யார் யாருக்கெல்லாம் இந்த சந்தேகம்
அதாவது சாதாரண சளி காய்ச்சல் ஏற்பட்டால் அது குணமடைவதற்கு குறைந்தபட்சம் 7 நாட்கள் வரை எடுக்கின்றனர் இந்நிலையில் கொரோனா பாதித்த நபர் குறைந்தபட்சம் 14 நாட்களாவது தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றால் மட்டுமே குணமடையும் என மருத்துவ நிபுணர்கள் சில நாட்களுக்கு முன்பு கூறிவந்தனர் மற்றும் இன்றுவரை அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் நாமக்கல் கோவை நீலகிரி திருப்பூர் போன்ற மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது இதில் சந்தேகம் என்னவென்றால் கடந்த ஐந்தாம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 15 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் 5ம் தேதியிலிருந்து நேற்று 14ம் தேதி வரை மொத்தமே 9 நாட்கள் மட்டுமே ஆனது அதாவது கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் குறைந்தபட்சம் 14 நாட்களாவது சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் 9 நாட்களிலேயே குணமடைந்து திரும்பியதாகவும் நாமக்கல் மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்பட்டது என அறிவிப்பு வந்தது.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்தது 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இருக்க அது எப்படி 9 நாட்களில் அந்த 15 பேரும் குணமடைந்து வீடு திரும்ப முடியும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உடல் எதிர்ப்பு சக்தி என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டது இப்படியிருக்க அந்த 15 நபரும் ஒரே மாதிரி 9 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உண்மையாகவே குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்களா இல்லை ஊரடங்கு நீட்டிப்பதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு பச்சை மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளனவா என்ற சந்தேகம் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment