நாமக்கல்லில் தான் பங்குபெற்ற கலை நிகழ்ச்சி அனுபவத்தை பற்றி கூறிய பிரபல தொகுப்பாளினி
நாமக்கல் மாவட்டம் புழவர்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சித்ரா அவர்கள் தான் நாமக்கல் மக்களுடன் பங்கேற்ற அனுபவத்தை தற்போது கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புழவர்பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சித்ரா மற்றும் மானாட மயிலாட நடன கலைஞர் திரு மாணாஸ் அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்து தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில் தான் பங்கு பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பற்றி கருத்து தெரிவித்து வரும் தொகுப்பாளினி சித்ரா அவர்கள் தான் நாமக்கல் மாவட்டத்தில் பங்கேற்ற கலை நிகழ்ச்சி பற்றி மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் அவர் கூறியதாவது நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் பாசமும் பண்பும் மற்றும் உழைக்கும் குணம் உடையவர்கள் என்றும். இப்பகுதி மக்கள் கலைஞர்களை நல்ல நாகரிகத்துடன் வழி நடத்தியதாகவும் மீண்டும் சென்று ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினால் அது நாமக்கல் மண்ணாக இருக்கும் என அவர் பெருமிதம் கொண்டு அந்த கருத்தில் தெரிவித்தார்.
நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற அந்த கலை நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது எனவும் எனது வாழ்வில் சிறந்த நாட்களில் அதுவும் ஒன்று என்று அவர் கூறினார்.
Comments
Post a Comment