திருச்செங்கோடு நகராட்சியின் முக்கிய விழா ரத்து

வைகாசி மாதம் விசாக தேர் திருவிழா ரத்து



நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வருடா வருடம் வைகாசி மாதம் விசாக தேர் திருவிழா வெகு விமர்சையாக இப்பகுதி மக்களால் கொண்டாடப்படும்.

 இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. இந்த வருடம் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.




திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரிதும் விரும்பும் இந்த அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழாவானது ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதால் மக்கள் மிகவும் மனமுடைந்து உள்ளனர்.


திருச்செங்கோடு நகரில் மிகப்பெரிய இருபெரும் விழாவில் ஒன்றான இந்த அர்த்த நாரீசுவரர் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா மக்களின் பங்கேற்புடன் மிக விமரிசையாகவும் இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



அதேபோன்று இந்த திருவிழாவும் திருச்செங்கோடு நகர மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு