நாமக்கல் மாவட்டத்தில் இன்று உச்சத்தைத் தொட்ட அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலில் முதல் நாளான இன்று நாமக்கல் மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட வெயிலின் தாக்கம்





நாமக்கல் மாவட்டத்தில் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் முதல் நாளிலேயே 109 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டியுள்ளது. இந்த அளவானது டிகிரி செல்சியஸில் குறிப்பிடும் பொழுது 41 டிகிரி செல்சியஸ் ஆகும் இந்த வெப்பநிலையானது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தில் 2 டிகிரி கூடியுள்ளது.






இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி தமிழகத்தின் ஊள் மாவட்டங்களான நாமக்கல் சேலம் திருச்சி கரூர் ஈரோடு போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் யாரும் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






அதன்படி இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே வெயிலின் தாக்கம் சதம் அடிக்க தொடங்கி உள்ளது இருப்பினும் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.







வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிராமப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேரங்களில் மக்களால் வெளியில் வர முடியவில்லை ஏனெனில் ஊரடங்கு தளர்வுகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப் பட்டிருக்கும் படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்கள் சற்று குறைவாகவே வெளியில் வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்