கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

நாமக்கல் நகராட்சியில் பல தெருக்களில் மீது விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது சில தளர்வுகளுடன் நீக்கம்



கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கும் வகையில், கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட மஜீத் தெரு, பேட்டை சுண்ணாம்புகார தெரு, குட்டை தெரு, நடராஜபுரம் முதல் தெரு மற்றும் பஜார் தெரு மீதான தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டாலும் மேற்கண்ட பகுதிகளில், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் இறைச்சி மற்றும் இதர இறைச்சி கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது!

நாமக்கல் பேருந்து நிலையம், உழவர் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலம் நீக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, பிற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது போல் மூன்று வண்ண அனுமதி சீட்டு வழக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே பொதுமக்கள் பொருட்கள் வாங்க வெளியே வரலாம்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், வணிக நிறுவன செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட ஊரடங்கு தளர்வு, தற்போது தடை நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் பொருந்தும். அதன்படி மால்கள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், குளிர்சாதன வசதி கொண்ட நகைகடை மற்றும் ஜவுளி கடைகள், டீ கடை, சலூன் மற்றும் அழகு நிலையம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையம், டாக்ஸி மற்றும் ஆட்டோ, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், சற்றுலா தளங்கள், பூங்காக்கள், கூட்ட அரங்குகள், தங்கு விடுதிகள், தங்கும் ஓட்டல்கள், ரெசார்ட்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள் பார்சல் செய்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி.

கட்டுப்பாட்டு மண்டலம் நீக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இதர கடைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, தடுப்புகள் அமைத்து, சமூக இடைவெளி விட்டு 13/05/2020 புதன்கிழமை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் தன் சுத்தம் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பிடில் முத்து தெரு மற்றும் பாவடி தெரு ஆகிய பகுதிகள் 14/5/2020 வரை தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்