குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகை கடைகளை திறக்கலாம் என அறிவித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
குளிர்சாதன வசதி இல்லாத நகைக்கடைகள் இயங்கலாம் என அறிவிப்பை வெளியிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் இன்று பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருவதால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகை கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என அனுமதி அளித்துள்ளார் ஆனால் இந்த நகை கடைகள் 5 நபர்களுக்குள்ளான வேலையாட்களை வைத்து வியாபாரம் செய்யும்படி அறிவித்துள்ளார்.
மேலும் இன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று பல்வேறு விதிமுறைகளை அறிவித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் சேலம் சாலையில் உள்ள மதுபான கடைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் அவற்றில் மதுபானம் வாங்க வரும்போது மதுப்பிரியர்கள் சரியானபடி சமூக இடைவெளி அனுமதி அட்டை மற்றும் ஆதார் போன்ற அடையாள அட்டைகளை சரியான படி மதுவினை பெற்றுச் செல்கிறார்கள் என நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கண்காணித்தார்.
Comments
Post a Comment