நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்திற்கு டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக 19 நாட்களுக்கு முன்பு இருந்தது. இந்நிலையில் அந்த 77 நபர்களும் சேலம் மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து அனைவரும் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இந்த கடந்த 19 நாட்களாக நாமக்கல் மாவட்டம் சிவப்பு மட்டத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது ஆரஞ்சு மண்டலமாக மாற்றி சில நாட்களிலேயே இருவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அப்பா மற்றும் மகன் ஆகிய இருவரும் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதிக்கு வந்து வந்துள்ளனர்.இவர்களை பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்த மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment