நாமக்கல் மாவட்டத்தில் மொபைல் போன்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விலை அதிகரிப்பு

நாமக்கல் நகராட்சியில் உள்ள பல்வேறு மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடைகளில் விற்பனையாகும் மொபைல் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு




கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் மொபைல் உதிரி பாகங்கள் சரிவர கிடைக்காததால் தற்போது கையிருப்பில் உள்ள மொபைல் உதிரி பாகங்களை அதிக விலைக்கு விற்கும் நிலைக்கு கடை உரிமையாளர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

மொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் மாவட்டத்திற்கு இடையேயான போக்குவரத்து தடை போன்ற காரணத்தினால் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்களின் வரவு குறைவாக இருப்பதால் இந்த சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்களுக்கு அந்தந்த நிறுவனம் அளித்துவந்த கிரெடிட் சர்வீஸ் தற்போது சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததால் உரிமையாளர்கள் மொபைல் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வது  பணத்தை கொடுத்து தற்போது கொள்முதல் செய்து வருகின்றனர்.



வழக்கமாக நிறுவனத்திடமிருந்து கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  கிரெடிட் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மொபைல் மற்றும் உதிரி பாகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்