தற்போதுள்ள அவசர நிலையில் இந்த அறிவிப்பு தேவைதானா எடப்பாடியாரே
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் போன்றவைகளின் வேண்டுகோளின்படி படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு
கொரோனா வைரஸ் ஊறடங்கு காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களில் பணிபுரியும் பல்வேறு நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள குடும்பங்கள் வேலையின்றி வீட்டில் அமர்ந்திருப்பதால்.
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த இரண்டு சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழக அரசிடம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.
அதாவது படப்பிடிப்பு நடத்தும் இடம் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளும் நடத்த வேண்டுமெனவும் படப்பிடிப்பில் பங்கேற்கும் கலைஞர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் படபிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போதும் கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பொது இடங்களில் படபிடிப்பு மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் ஊரகப் பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளலாம் இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பை மேற்கொள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பை மேற்கொள்ள விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்குப் பிறகே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்.
படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கேமரா போன்ற உபகரணங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் படப்பிடிப்பு ஊழியர்களைத் தவிர பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது அவர்களுக்கு அனுமதி இல்லை.
போன்ற விதிமுறைகளுடன் தமிழக அரசு இன்று சின்னத்திரை மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கு படப்பிடிப்பை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
Comments
Post a Comment