உலக சுகாதார அமைப்புடன் தனது உறவை இன்று முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

உலக சுகாதார நிறுவனம் என்பது உலக நாடுகளுக்கு நோயினால் ஏற்படும் இடர்பாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் மற்றும் நோய் பரவ வண்ணம் கண்காணித்து வரும் ஒரு அமைப்பாகும்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள்  அமெரிக்கா இன்று முதல் உலக சுகாதார அமைப்புடன் தனது உறவை முறித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் உலக சுகாதார அமைப்பு பொதுவாக செயல்படவில்லை என்றும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உலக சுகாதார அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தற்போது வரை நீதி சென்று கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 450 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி தொடர்ந்து இதுவரை உலக சுகாதார அமைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்த செயல் தொடர்ந்தால் அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் நிதி எதிர்காலத்தில் நிறுத்தப்படலாம் என அறிவித்திருந்தார்.

 மேலும் கொரோனா விஷயத்தில் சீனாவுடன் வெளிப்படைத் தன்மை யான பதில்களை அறிய அமெரிக்கா ஆவலாக உள்ளது எனவும் அதற்கு சுகாதார அமைப்பு உதவ வேண்டுமென அவர் செய்திக்குறிப்பில் கூறினார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்