நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தடையில்லாமல் பாதுகாப்புடன் வீடு தேடி வந்துசேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்கள் தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்கிறதா என்பதை அறிய தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தந்து வருகின்றனர். பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் வணிகர் சங்க பிரதிநிதிகளான ஜெயகுமார் வெள்ளையன் 98437 98438 பொன்.வீரக்குமார் -94431 59359 N.P.கிருஷ்ணன் -91590 25307 சேந்தை க...