அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு

நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் 7 டன் ஆக்சிஜன் கிடைப்பதற்கு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.


நாமக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ராமலிங்கம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு இருப்பு குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பது குறித்தும் எம்எல்ஏவின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இதையடுத்து தனியார் மருத்துவர் குழந்தைவேல், தொழிலதிபர்கள் நடராஜன், பாமா ரங்கநாதன், ராஜேஷ் கண்ணா ஆகியோர் மூலம் 7 டன் ஆக்சிஜன், மருத்துவமனைக்கு கிடைக்கும் வகையில் MLA ராமலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், 100 ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாமக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எம்எல்ஏ ராமலிங்கம் தெரிவித்தார்.

Comments