நாமக்கல்லில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களான சேலம், ஈரோடு, கரூரில் இருந்தும் விவசாயிகள் 1500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.இந்த பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையானது.
Comments
Post a Comment