சமூக இடைவெளியுடன் வீட்டிலேயே ரம்ஜான் கொண்டாட்டம்
கொரோனா தொற்று ஊரடங்கால் சமூக இடைவெளியுடன், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். ஊரடங்கு அமலில் உள்ளதால், தங்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து, கோலாகலமாக கொண்டாடினர். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை, வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் வீட்டுப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக நாமக்கல்-சேலம் சாலை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்துவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கு தடை உத்தரவால் அந்த மைதானத்தில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment