2,520 டன் மக்காச் சோளம் சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தடைந்தது
சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டப்பணி முடிவடைந்து, சரக்கு போக்குவரத்து துவங்கியதையடுத்து.
பல்வேறு மாநிலங்களில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள், கோழிகளுக்கான தீவனம், நாமக்கல் வந்து சேர்கிறது.
கர்நாடகா, ராஜஸ்தான், பீஹார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து, அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை, கோதுமை, மக்காசோளம், புண்ணாக்கு, சோயா உள்ளிட்டவை தருவிக்கப்படுகிறது.
அவற்றை லாரிகள் மூலம், சம்பந்தப்பட்ட கிடங்குகள், அரவை ஆலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்படுகிறது.
நேற்று, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, 2,520 டன் மக்காச்சோளம், 42 வேகன் கொண்ட சரக்கு சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தது. அவை, லாரிகளில் ஏற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன.
Comments
Post a Comment