நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு
தமிழக அரசு உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல், ஆவின் பால் விலை, லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்படுகிறது' என, நாமக்கல் ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட ஆவின் மூலம், பொதுமக்களின் நலன் கருதி, ஆவின் பாக்கெட் பால் விலை, இன்று (மே, 16) முதல், லிட்டருக்கு, மூன்று ரூபாய் வீதம் குறைக்கப்படுகிறது.
இச்சலுகையை பயன்படுத்தி, பொதுமக்கள், ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன் பெறலாம். பால் பாக்கெட்டுகளின் விலை விபரம் (அடைப்புக்குள் பழைய விலை): நிலைப்படுத்திய பால், 250 மி.லி (பச்சை நிறம்), 11.25 ரூபாய். (12); 500 மி.லி., 22 ரூபாய் (23); ஒரு லிட்டர், 44 ரூபாய் (47); முழு கொழுப்பு செறிந்த பால் (ஆரஞ்சு நிறம்), 500 மி.லி., 24.50 ரூபாய் (26); ஒரு லிட்டர், 48 ரூபாய் (51) ஆகும்
.
Comments
Post a Comment