தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது பத்து லட்சம் முட்டைகள் வழங்க முடிவு

கொரோனா பெருந்தொற்று துயர் துடைப்பு நிதிக்கு தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், அரசு/தனியார் ஊழியர்கள் சங்கங்கள் , பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள்.


இதையடுத்து இன்று வியாழக்கிழமை (13.05.2021) தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
 திரு. ஸ்டாலின் அவர்களிடம், 
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு இராமலிங்கம் உடன்,தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியின் தலைவர் திரு.வாங்கிலி சுப்பிரமணியம் அவர்கள் உபதலைவர் திரு அபி பன்னீர், பொருளாளர் திரு .திவ்யா காளியண்ணன், திரு S.Kபார்ம்ஸ் சுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா முரளி ஆகியோர் உடன், மார்க்கெட்டிங் சொசைட்டியின் சார்பாக கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் ஒரு கோடி மற்றும் 10 லட்சம் முட்டைகளை வழங்குவதற்கான காசோலையை நேரில் வழங்கினார்.

காசோலையைப் பெற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர், கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஒரு கோடி ரூபாய் மற்றும் 10 லட்சம் முட்டைகளை கொடுத்து உதவிய பண்ணையாளர்கள் அனைவருக்கும்
 நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது