10 மாவட்ட மக்கள் பயன் பெறும் அளவில் 8,000 ஆக்சிஜன் படுக்கைகள்
சேலம் உருக்காலை,
கரூர் TNPL நிறுவனங்களில், 10 மாவட்ட மக்கள் பலன் பெறக்கூடிய வகையில், 8,000 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா கலை கல்லூரியில், ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் மையத்தை நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த மையத்தை, 200 படுக்கை வசதிகள் கொண்டதாக அதிகப்படுத்தி உள்ளனர். 30 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர்.
கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. சென்னைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்கான பங்கை பெற்று, இரண்டாவது தவணை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் உருக்காலை, கரூர் டி.என்.பி.எல்.,லில், 8,000 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அந்தளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி அங்குள்ளது. 10 மாவட்டங்களுக்கு இது பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment