நாமக்கல் மாவட்டத்தில் வெளி மாவட்டத்தினர் வராமல் தடுக்க 23 சோதனை சாவடி அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வெளி மாவட்டத்தினர் வராமல் தடுக்க 23 சோதனை சாவடி அமைப்பு
எஸ்பி சக்திகணேசன் பேட்டி
நாளை காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளன. இது குறித்து நாமக்கல் எஸ்பி சக்திகணேசன் செய்தியார்களிடம் கூறியது : நாளை காலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளன. வெளிமாவட்டத்தினர் நமது மாவட்டத்திற்கு வராமல் தடுக்க 23 சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முழு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனோ சங்கிலி பரவலை தடுக்க முடியும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். அதனை நாம் அனைவரும் பின்பற்றி கொரோனோ இல்லாத மாவட்டமாக இருக்க முடியும். விழிப்புணர்வு முழுமையாக வழங்கப்படும். லாக்டவுன் 14 நாட்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் போலீஸார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
பொதுமக்களிடம் கடினமாக போலீஸார் நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் தொற்று குறைய தான் ஊரடங்கு. தொற்று பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் 2 முககவசம் அணிவது😷😷😷😷 பாதுகாப்பானது. முகபாதுகாப்பு அணிவது பாதுகாப்பானது. அதனை பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் 1200 போலீஸார் மற்றும் 225 ஊர்க்காவல் படையினர் பணி மேற்கொள்ள உள்ளனர். கொரோனோ விதிமுறைகளை முறையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பாக போலீஸார் பணி மேற்கொள்வார்கள்.
முதியவர்கள் மருந்து, உணவுதேவைப்படுவர்கள் உதவி கேட்டால் அதை உடனுக்குடன் செய்யப்படும். 100 எண்ணில் தகவல் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 14 நாட்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தால் கொரோனோ தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்படலாம் என்றார்.
Comments
Post a Comment