நாமக்கல்லில் காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி, அந்த சாலை வழியாக வந்தோருக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கி கொரோனா நோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
மேலும், எரிவாயு உருளை எடுத்து செல்லும் தொழிலாளா்கள், சரக்கு வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கும் நேரடியாக சென்று காவல் துறையில் நோய்த் தொற்றை தடுக்கும் கபசுரக் குடிநீரை வழங்கினா்.
நாமக்கல்- திருச்சி சாலையில் பொது முடக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளா் மா.சிவலிங்கம் குளிா்பானங்களை வழங்கினா்.
Comments
Post a Comment