நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 904 ஆக அதிகரித்தது.இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,232 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 239 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 15 ஆயிரத்து 2 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
125 பேர் இறந்து விட்ட நிலையில், 2,105 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment