கோழிப்பண்ணையார்கள் கவனத்திற்கு

காலை முதல் இரவு வரை கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை முதல் இரவு வரை கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோழி பண்ணையார்கள் தொடர்ந்து கோடைக்கால பராமரிப்பு முறைகளை தீவிர முறையில் கடைபிடிக்க வேண்டும். தீவன எடுப்பு, கோழிகளில் மிகவும் குறைந்து உள்ளது. அதன் காரணமாக முட்டை உற்பத்தியும், முட்டை எடையும் குறைந்து உள்ளது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக குறைந்த வெப்ப அளவு, மீண்டும் உயர தொடங்கி உள்ளது. ஆதலால் வரும் நாட்களில் கோடை காலத்திற்கான தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். தீவனத்தில் அமீனோ அமிலங்கள், தாவர எண்ணெய் சேர்த்து எரிசக்தியின் அளவை உயர்த்த வேண்டும். எலக்ட்ரோலைட்ஸ் உப்புகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை கலந்து தர வேண்டும். அதிக அளவில் ஏற்படும் முட்டை ஓடு குறைபாடுகளை களைய சோடா உப்பை சேர்த்து வர வேண்டும். அயற்சி ஏற்படா வண்ணம் தீவனமிடுதலை காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வெப்ப அதிர்ச்சியில் இருந்து கோழிகளை காப்பாற்றலாம். கோழிகளுக்கு காலை முதல் இரவு வரை குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது