ராசிபுரத்தில் ரூ.57 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்


நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளையில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. 

இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். 

சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி உள்பட பல பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு, மஞ்சளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.மொத்தம் ஆயிரத்து 150 மஞ்சள் மூட்டைகள் ரூ.57 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Comments