நாட்டு மருந்து கடைகளை நாடும் நாமக்கல் மக்கள்
கொரோனா தொற்று வராமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் மக்களும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொரோனாவில் இருந்து காத்து கொள்ள முன்வருகின்றனர்.
இதனிடையே ஆரம்பத்திலேயே சித்தா, ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பில் இருந்து காத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பெரும்பாலானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
நாமக்கல் கடைவீதி பகுதியில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பொதுமக்கள் வருகிறார்கள்.
இதேபோல் நாமக்கல் நகரில் மற்ற பகுதிகளில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நாட்டு மருந்து கடைகளில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் விற்பனை அதிகரித்து உள்ளன. பொதுமக்கள் கபசுர குடிநீருக்கான பொடி, நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் மூலிகை தேநீர் அதிகளவில் வாங்கிச்சென்று வருகின்றனர்.
Comments
Post a Comment